தமிழ்நாடு

" தோல்வியை மறைக்கவே ரூ.2,000 செல்லாது என அறிவிப்பு... " - அமைச்சர் மா.சுப்ரமணியன்

Malaimurasu Seithigal TV

கர்நாடகாவில் பாஜக தோல்வியை மறைக்கவே 2000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்திருக்கிறார்கள் என அமைச்சர் மா.சுப்ரமணியன் விமர்சித்துள்ளார்.

திமுக அரசின் இரண்டு ஆண்டு கால ஆட்சியின்  சாதனை விளக்கப்  பொது கூட்டம் மதுரவாயலில் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகள் குறித்து விளக்கி பேசியதோடு,  நலத்திட்ட உதவிகளையும்  வழங்கினார்.

அப்போது  அவர் பேசியதாவது:

" ஏற்கனவே பண மதிப்பு இழப்பு அறிவிக்கப்பட்டபோது மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். அந்த மன நிலையில் இருந்து இன்னும் மக்கள் மாறவில்லை; தற்போது மீண்டும் மோடி மிகப்பெரிய அளவில் கோமாளித்தனமான செய்தியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்திருக்கிறார்".

" இதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் கண்டனத்தைத்  தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் பாஜக துடைத்து எரியபட்டிருக்கிறது மிக மோசமான தோல்வியை கண்டு இருக்கிறார்கள். தமிழர்கள் உள்ள பகுதியில் பாஜகவின் தலைவர்  அண்ணாமலை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.  80 ஆயிரம் வாக்குகள் உள்ள பகுதியில் பாஜகவிற்கு 10 வாக்குகள் மட்டும் கிடைத்துள்ளது. இந்த அவமானங்களை மறைப்பதற்கு மக்களின் எதிர்ப்புக்கு காரணமாக 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று கூறியுள்ளார்கள்",  என பேசினார்.