தமிழ்நாடு

தென்காசி : அரசு கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டம்...! தொடங்கி வைத்த ஆட்சியர்..!

தென்காசி அரசு கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் துவக்கி வைத்தார்.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு வரை படித்து, அரசு கல்லூரிகளில் படிப்பை தொடரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதுமைப் பெண் திட்டத்தில் உதவித் தொகை பெறுவதற்காக 619 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு இன்று முதல் கட்டமாக 200 மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று தென்காசி இ.சி.ஈ. அரசு பள்ளி கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை வகித்து, கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் உதவித்தொகையினை வழங்கினார். மேலும், நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.