தீபாவளி பண்டிகையை ஒட்டி, காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு நீலநிற பட்டுடுத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பட்டாசு வெடிக்கப்பட்டு, நான்கு மாட வீதிகளில், அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பழனி முருகன் கோவிலில் தீபாவளியையொட்டி, அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
வின்ச் மற்றும் ரோப் கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மலை மீது சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் படிக்க | கூட்டம் கூட்டமாய் தரிசனம்... களைகட்டிய கபாலீஸ்வரர் கோவில்...
இதேபோன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புத்தாடை அணிந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து உண்ணாமலையம்மன் மற்றும் அண்ணாமலையாரை தரிசித்தனர்.
தீபாவளி ஒட்டி கோவை தொண்டாடுத்தூர் பகுதியில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் புத்தாடை அணிந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து, சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் படிக்க | ஆளுநரின் உத்தரவை விமர்சித்த கேரள கல்வி அமைச்சர்!!! ஆளுநரால் சூடுபிடித்துள்ள கேரள அரசியல்!!