நீலகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் 10 ஏக்கர் நிலப் பரப்பில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி திடலில் நடைபெற்ற திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, கொரோனா காலகட்டத்தில் மருத்துவமனைகளுக்கு போதிய ஆக்சிஜன் வசதி செய்து கொடுத்தது உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் 2 ஆண்டுகால சாதனைகளை பட்டியலிட்டார்.
இதையும் படிக்க : உட்கட்சி பதவிப் போட்டியால் தமிழ்நாடு சீரழிவை சந்தித்தது...முதலமைச்சர் குற்றச்சாட்டு!
நீலகிரி மாவட்ட மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், 5 கோடி ரூபாய் மதிப்பில் படகு இல்லத்தில் சாகச விளையாட்டுகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். உதகை எச்.பி எப் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் ராமச்சந்திரன், விரைவில் பேருந்து வசதி இல்லாத கிராமப் புறங்களுக்கு புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.