தமிழ்நாடு

மாணவிகள் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பம்.... தைவான் நாட்டில் ஆராய்ச்சி!

Tamil Selvi Selvakumar

விவசாய நிலங்கள் ம‌ற்றும் குடியிருப்பு ப‌குதியில் வரும் காட்டெருமையை கண்டறியும் தொழில்நுட்பத்தை கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. 

மாணவிகளின் புதிய கண்டுபிடிப்பு:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அட்டுவம்பட்டி பகுதியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது . இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர் . தொடர்ந்து தற்போது பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கைகளும் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் பல்கலைக்கழகம் மாணவிகள் தற்போது புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர் . 

காட்டெருமை வருகையை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம்:

அந்த வகையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகளை கண்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கும் வகையில் தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். 

பெண்கள் பாதுகாப்புக்கு ரிமோட் கண்ட்ரோல்:

தொடர்ந்து வீடுகள் மற்றும் தெருக்களில் வைக்கப்படும் குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிறையும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கும் வகையிலும், மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரிமோட் கண்ட்ரோல்  ஒன்றையும் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். இந்த‌ செய‌லி மூல‌ம் த‌ன‌து பாதுகாவ‌ல‌ருக்கு தான் ஆப‌த்தான‌ நிலையில் இருப்பதாக  த‌க‌வ‌ல் அளிக்கும் வ‌கையில் க‌ண்டுபிடிக்க‌ப்பட்டுள்ளது.

தைவான் நாட்டு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி:

மாணவிகளின் கண்டுபிடிப்பு குறித்து பேட்டி அளித்த பல்கலைக்கழகத் துணை வேந்தர் வைதேகி விஜயகுமார், இந்த செயலிகளை கண்டுபிடித்த இரண்டு மாணவிகள், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இருந்து தாய்வான் நாட்டிற்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் நான்கு மாதங்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். மேலும்,  கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பள்ளி படிப்பை முடித்த மாணவிகள் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இணையலாம் என்றூம்,  அவர்களுக்கான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .