அரசு மதுபானக் கடைகளில் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரசு மதுபானக் கடைகளில் மதுபானங்களின் அதிகபட்ச விலையை விட 10 ரூபாய் அதிகமாக வசூலிக்கப் படுவதாக சர்ச்சை பல நாட்களாக எழுந்து வந்துள்ளது. மதுபானக் கடைகளில் 10 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படும்போது அதனை எதிர்த்து மதுப்பிரியர்கள் மதுபானக் கடை விற்பனையாளர்களுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாளர் விசாகன் ஐஏஎஸ் டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளார். அச்சுற்றறிக்கையில் அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவர் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடா்!