தமிழ்நாடு

”தமிழ்நாடு அரசு கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும்” - தலைவா் எா்ணாவூா் நாராயணன் உறுதி!

Tamil Selvi Selvakumar

வருங்காலங்களில் மாவட்ட ஆட்சியா்களின் அனுமதியில்லாமல் பனை மரங்கள் வெட்டுவது தடுக்கப்படும் என பனை மர தொழிலாளா் நலவாாிய தலைவா் எா்ணாவூா் நாராயணன் உறுதியளித்துள்ளாா். 

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பனை மர தொழிலார்களின் நல வாரிய ஆய்வு கூட்டம், பனை தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பனை தொழிலாளர்களுக்கு பதநீர் இறக்குவதற்கும், அதனை கருப்பட்டி தயாரிப்பதற்கும், நுங்கு வெட்டுவதற்கும் அனுமதி உள்ளது. ஆனால் கள் இறக்குவதற்கு அனுமதி இல்லை. எனவே, தமிழ்நாடு அரசு கள் இறக்க அனுமதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா். 

தொடா்ந்து பேசிய அவா், வருங்காலங்களில் மாவட்ட ஆட்சியா்களின் அனுமதியில்லாமல் பனை மரங்கள் வெட்டுவது தடுக்கப்படும் எனவும் உறுதியளித்தாா்.