தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று ஆளுநர் பேசியதற்கு எதிராக மாநிலக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு டூ தமிழகம்:
தமிழக ஆளுநர் ஆர். என் ரவி கடந்த வாரம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைத்தால் போதும் என்று பேசியது சர்ச்சை கிளப்பியது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலரும் இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழ்நாடு என்பதை சொல்ல மறுக்கும் ஆளுநரே தமிழகத்தை விட்டு வெளியேறு என மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.
மாநிலக் கல்லூரி:
தமிழ்நாடு என்ற பெயரை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர்
தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்லுகிறார், ஆளுநர் அதன் அதிகாரப் போக்கை தமிழக மக்களுக்கு எதிராக செய்து கொண்டிருக்கிறார் எனவும், தற்பொழுது பெரியார் மண்ணுக்கு திராவிட சித்தாந்தத்திற்கு ஒரு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு எதிராக மாநில கல்லூரி மாணவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: மதமாற்ற தடைச்சட்டம்....மத்திய அரசின் வழக்கறிஞரை சராமரியாக கேள்வியால் தாக்கிய தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்....நடந்தது என்ன?!!