தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் இதய இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதய அடைப்பை சரி செய்ய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று ஓமந்தூரார் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது மேலும் ESI மருத்துவமனை மருத்துவர்கள் குழுவும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்துள்ளது இந்நிலையில் தமிழக அரசின் மருத்துவ குழுவின் பரிந்துரையை ஏற்று சிகிச்சை தொடரவிடாமல் டெல்லி AIIMS ல் இருந்து மருத்துவர்கள் குழு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பரிசோதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை வற்புறுத்தி வருகிறது.
மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கோரிய வழக்கு: நாளை தீர்ப்பு
இது உலக அளவில் மருத்துவ தலைநகராக திகழும் சென்னையில் உள்ள மாநில அரசு மருத்துவர்கள் மற்றும் மத்திய அரசு மருத்துவர்கனின் அறிக்கையை உதாசீனப்படுத்தி ஒட்டுமொத்த தமிழக மருத்துவத்தின் தரத்தை கொச்சை படுத்துவதாகும். இது உயிர் காக்கும் அறுவை சிகிச்சையை மேலும் தாமதப்படுத்தி, உடல்நிலை மேலும் மோசமடைய வழிவகுக்கும், இத்தகைய நடவடிக்கையை தமிழக மருத்துவர்களின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.
தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் ஆற்றல், நம்பகத் தன்மை கண்ணியம் ஆகியவற்றை கேள்வி எழுப்பும் அமலாக்க துறையின் முடிவுகளை தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் TNMOA வன்மையாக கண்டிக்கிறது.