தமிழ்நாடு

”முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தமிழ்நாடு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Malaimurasu Seithigal TV

முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தமிழ்நாடு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள பீனிக்ஸ் கோத்தாரி காலணி உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையின் மூலம், சுமார் 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். அத்துடன், அதற்கு கண்கூடான சாட்சியாக இந்த தொழிற்சாலை அமையும் என்றும் கூறினார். 

தொடர்ந்து பேசியவர், தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்க்கும் போது, 2030-ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற இலக்கை தமிழ்நாடு அடைந்துவிடும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.