தமிழ்நாடு

ஆன்லைன் வர்த்தகத்தால்...... தொடரும் தற்கொலைகள் ..!

Malaimurasu Seithigal TV

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இருளப்பபுரம் மதுசூதன பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன்,இவரது மகன் கவுதமன் (வயது24). இவர் சென்னையில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படித்து வந்தார். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஆன்லைன் வர்த்தகத்தில் (கிரிப்டோ கரன்சி) ஈடுபட தொடங்கினார்.

இதில் 5 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்து நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. எனவே கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். இதற்கிடையே நேற்று கவுதமன் வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்றார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அறையின் உள்ளே சென்று பார்த்த போது வாயில் நுரை தள்ளிய நிலையில் கவுதமன் பிணமாக கிடந்தார். இதனை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

 இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


போலீசார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனவேதனையில் இருந்த கவுதமன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.