தமிழ்நாடு

நீட் தோல்வியால் தன்னைத் தானே மாய்த்துக்கொண்ட மாணவர்... சோகத்தில் தந்தையும் விபரீத முடிவு!!

Malaimurasu Seithigal TV

குரோம்பேட்டை அருகே நீட் நுழைவுத் தேர்வில் தெடர்ந்து இரண்டு முறை தோல்வியடைந்த 19 வயது மாணவன் தூக்கிட்டு தற்க்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரில் வசிக்கும் செல்வம் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன்(19) 12-ம் வகுப்பு படித்து முடித்து இரண்டு முறை நீட் நுழைவுத் தேர்வு எழுதியும், இரண்டு முறையும் நீட் நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தால்  மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவரது தந்தை செல்வம் பரவாயில்லை அடுத்தமுறை எழுதி வெற்றி பெற்று விடலாம் என சமாதானப்படுத்தி ஆறுதல் கூறி வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று காலை அவரது தந்தை வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்டடி ரூமில் வேஷ்டியால் சுவற்றில் இருந்த கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அப்பொழுது வீட்டிற்கு வேலை செய்ய வந்த பணிப்பெண்,  இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரது அப்பாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

அவர் உடனடியாக அவசர உதவி எண் 100 க்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் சிட்லபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஜெகதீஸ்வரனின் தந்தை, " என் பிள்ளை போன்ற மாணவர்கள் தொடர் தற்கொலையில் ஈடுபட்டு வருகிறார்கள் அது நிறுத்தப்பட வேண்டும் என்றால் இந்த நீட் தேர்வை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, "கடந்த ஒரு வருடமாக எந்த மாணவரும் நீட் தேர்வுக்காக தற்கொலை செய்துகொள்ளவில்லை" என பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.