தமிழ்நாடு

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து...சென்னை வானிலை மையம் சொன்னது என்ன?

Tamil Selvi Selvakumar

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம்:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடற்கரையில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி முன்னதாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் கணித்தது.

தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாகவும், இதன் எதிரொலியால் வரும் 25ம் தேதி தமிழக தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகையில் இருந்து தென்கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து தென்கிழக்கே 690 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இரு நாட்களில் இலங்கைப் பகுதியை நோக்கி நகரக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலுக்கு நாளை செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.