தமிழ்நாடு

ஆக்சிஜன் உற்பத்தி காலக்கெடுவை நீட்டிக்க ஸ்டெர்லைட் கோரிக்கை...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மேலும் 6 மாதம் அனுமதிக்க கோரி முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளது.

Malaimurasu Seithigal TV
தமிழகத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது.  இந்த நேரத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சார்பில் இலவசமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருவதாக நீதிமன்றத்தில்  வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து ஆறு மாதங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது.  இதனிடையே 3வது அலை வர இருப்பதால், ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும் என்பதால் மேலும் 6 மாதங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. தனது இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வேதாந்தா நிறுவனம் மனு அளித்துள்ளது.