நட்சத்திர ஹோட்டலின் லிப்ட்டில் சிக்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை மயிலாப்பூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலான சவேரா ஹோட்டலில் ஹவுஸ்கீப்பிங் பிரிவில் பணிபுரியும் ஊழியர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பெரம்பூர் ஹைதர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக். இவர் சவேரா ஹோட்டலில் சில வருடங்களாக ஹவுஸ் கீப்பிங் பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் சர்வீஸ் லிப்டில் பொருட்களை ஏற்றிக்கொண்டு, எட்டாவது மாடிக்கு செல்லும் பொழுது, கதவுகள் இடையே இடையே அபிஷேக் சிக்கிக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அவரது உடல் ஆனது ஏழாவது மாடிக்கும், எட்டாவது மாடிக்கும் இடையே சிக்கி, படுகாயமடைந்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். உடனடியாக அபிஷேக் உடலை மீட்பதற்காக தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர். அபிஷேக் உடலை மீட்பதற்குள் அபிஷேக் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.
அபிஷேக்கின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், சென்னை ராயப்பேட்டை போலீசார், லிப்ட் இன்ச்சார்ஜ் கோகுல்(39), தலைமை பொறியாளர் வினோத்குமார்(38) மற்றும் ஹோட்டல் மேலாளர் குமார்(54) ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: நிறுவனத்தாலோ அல்லது நிறுவனத்தின் மீதோ எந்த மோசடியும் நடக்கவில்லை: டாடா கன்சல்டண்சி நிறுவனம்!!