தமிழ்நாடு

"அதிமுக ஆட்சித் திட்டங்களுக்கு திமுக ரிப்பன் வெட்டுவதாக கூறியது பச்சை பொய்" முதலமைச்சர்!

Malaimurasu Seithigal TV

திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் தி.மு.க. சார்பில் வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். 

அப்போது, திருவண்ணாமலையையும், திமுகவையும் பிரிக்க முடியாது என கூறினார். நாடாளுமன்ற களம் நமக்காக காத்திருக்கிறது, வெற்றிக்கனியை பறிப்போம் என எனவும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், வாக்காளர் பட்டியலை வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சரிபார்க்க வேண்டும் என்றும் நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.

திமுக அரசு கொண்டு வந்துள்ள ஒவ்வொரு திட்டங்களாலும் பொதுமக்கள் பயடைந்து வருவதாக கூறினார். மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம்,  காலை உணவு உள்ளிட்டவை அதிமுக திட்டமா என விளாசினார்.  நாடாளுமன்ற தேஎபாஜகவுடன் கூட்டணியில் இருந்தால் டெபாசிட் கிடைக்காது என்பதால் பிரிந்தது போல் நாடகம் நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி எனவும் கடுமையாக அவர் விமர்சித்தார். 

சிறுபான்மையினர் மீது அக்கறை வந்ததாக திடீரென நாடகமாடுகிறது அதிமுக என குற்றம்சாட்டினார். இந்தியாவே தலை நிமிர்ந்து பார்க்கும் ஆட்சியை நடத்தி கொண்டிருப்பதாக 
முதலமைச்சர் கூறினார்.  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும், அதற்காக அனைவரும் உழையுங்கள், நாற்பதும் நமதே, நாடும் நமதே எனவும் குறிப்பிட்டார்.