புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் இன்று நடைபெற்ற விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தற்போதைய அரசியல் சூழ்நிலையை பற்றிப் பேசியுள்ளார்.
ஜல்லிக்கட்டு வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற்றுக் கொடுத்தமைக்காக புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் இன்று நடைபெற்ற தமிழக முதலமைச்சருக்கான நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, தற்போது தமிழகத்தில் பாசிச சக்திகள்
அரசியல் ஜல்லிக்கட்டை தொடங்கியுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகளில் வாடிவாசல் வழியாகத்தான் காளைகள் அவிழ்க்கப்படும். ஆனால் அவர்களால் நேர்வழியாக வர முடியாமல், புறவாசல் வழியாக விளையாடி வருகின்றனர். அவர்களின் இந்த செயலை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், ID ED CBI இவை தான் பாஜவின் தொண்டர் படை, தேர்தல் நேரத்தில் மட்டும் இந்த படை பணி செய்யும். 2016 ல் இருந்து இருவரையில் 121 தேர்வு அமலாக்கத்துறை மூலம் சோதனை நடந்துள்ளது என்றும் இதில் 115 பேர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் இதன் மூலமே மத்திய அரசின் செயல்பாடு தெரிய வந்துள்ளது என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் சோதனை என்ற பெயரில் கொடுமை படுத்தியுள்ளனர். இப்போது மத்திய பாஜக அரசு செந்தில் பாலாஜியை குறிவைத்துள்ளது. நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம், ED க்கும் பயப்பட மாட்டோம், ஏன் என்றால் நாங்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் வந்தவர்கள் எனவும் பேசியுள்ளார்.
மேலும், தமிழக ஆளுநர் தன்னை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி போல் நினைத்து கொள்கிறார். முதல்வர் சொல்லும் இடத்தில் கையெழுத்து போடுவது மட்டும் தான் ஆளுனருடைய வேலையாகும். 20 கோப்புகள் ஆளுநர் இன்னும் நிலுவையில் வைத்துள்ளார். அதில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் குறித்த ஊழல் பட்டியலும் அடங்கும். முன்னாள் அதிமுக அமைச்சர்களை ஆளுநர் காப்பாற்ற முயல்கிறார் எனவும் பேசியுள்ளார்.
கடந்த 2019,2021 தேர்தல்களை போல வருகின்ற 2024 தேர்தலிலும் அதிமுக பாஜக கட்சியினரை ஒட ஒட விரட்டியடிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: "எனக்கு என் வண்டி வேணும்!" : டவர் மீது ஏறி போதை ஆசாமி அட்டகாசம்!