தமிழ்நாடு

"தினமும் 5 ஆயிரம் லோடுகள் கோவை வழியாக கேரளாவிற்கு கடத்தல் நடைபெற்று வருகிறது": எஸ் பி வேலுமணி பேச்சு!

Malaimurasu Seithigal TV

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர் சந்திப்பில் பேசியிருப்பதாவது, தினமும் 5 ஆயிரம் லோடுகள் கோவை வழியாக கேரளாவிற்கு கடத்தல் நடைபெற்று வருகிறது.

வேலை நிறுத்தம் சார்பாக ஏழை, நடுத்தர மக்கள் பாதிப்படைந்துள்ளது. தமிழ்நாடு அரசு எதையும் கண்டுகொள்வதில்லை. மேலும், தமிழ்நாட்டில் கல் குவாரிகளின் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்

5 ஆயிரம் கல் குவாரிகள் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்ததில் ஈடுப்பட்டுள்ளனர். மீண்டும் மணல் அள்ளும் வாய்ப்பை இந்த அரசு வெளி மாநிலங்களுக்கு கடத்த திட்டமிட்டுள்ளது. அதிக அளவில் பணம் கொள்ளை அடிக்க திட்டம் போட்டுள்ளது என பேசியுள்ளார்.

எம்.சாண்ட் தயாரிக்கும் குவாரிகள் முடக்கப்பட்டுள்ளது. இதுவே, கேரளாவில் இருந்து ஒரு லோடு கல்லோ?? மண்ணோ?? கொண்டு வர முடியுமா எனக் கேள்வியும் எழுப்பியுள்ளார். இதையெல்லாம், அரசு அதை தடுக்கவில்லை என்றால் மாநில எல்லையில் மக்களை வைத்து தடுத்து நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுகிறோம், என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ஆளுனர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் கூறியுள்ளார். மேலும், கனிம வளம் கடத்தல் காரணமாக சாலைகள் பாதிப்படைகிறது. டாஸ்மாக்கில், கூடுதலாக 10 ரூபாய் வாங்கும் நிலை இன்னும் தொடர்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும்  எனவும், ஒரு யூனிட்க்காக 500 முதல் ஆயிரம் வரைக்கும் வசூல் செய்கின்றனர், வசூல் செய்யப்படும் பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லை, எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.