தமிழ்நாடு

அரசே உதவி செய்யாத அரசு பள்ளிக்கு, சமூக ஆர்வலர் செய்த உதவி!

Malaimurasu Seithigal TV

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உள்ள அரசு பள்ளிக்கு தனது சொந்தச் செலவில் உதவி செய்த சமூக ஆர்வலரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஒற்றையால்விளையில் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி போதுமான இடம் இல்லாமல், இட நெருக்கடி காரணமாக வகுப்புகள் இன்றி மாணவ, மாணவிகள் மர நிழலில் தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

பலமுறை அரசுக்கு, இப்பள்ளியின் நிலைமையை தெரியப்படுத்தியும், பல முறை கோரிக்கை வைத்தும், வகைப்பறைக்கு தேவையான இருக்கைகளை அரசு வழங்கவில்லை. இந்த காரணத்தால், பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் நன்கொடையாளர்கள் மூலம் உதவிகளை பெற்று வந்தனர். 

இந்நிலையில், கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர் ஜெய சிறில் என்பவர் அரசு பள்ளிக்கு தனது சொந்த செலவில் ரூ 2 லட்சம் மதிப்பிலான இருக்கைகளை இன்று பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கியுள்ளார். அரசு, மாணவர்களை கைவிட்ட போதிலும், தானாக முன்வந்து அரசு பள்ளிக்கு உதவிய சமூக ஆர்வலர் ஜெய சிறிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் பாராட்டிவருகின்றனர்.