தமிழ்நாடு

திராவிட மாடல் ஆட்சியில் சமூக நிதி என்பது 0 சதவீதம் - எல்.முருகன்

Malaimurasu Seithigal TV

சென்னை தி.நகரில் உள்ள  சார்.பி.டி தியாகராய அரங்கில்  அண்ணல் அம்பேத்கர் 133  பிறந்த நாள் விழா முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றன இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் , பாஜக துணை தலைவர் வி பி துரைசாமி கரு நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

அதைத் தொடர்ந்து பின்னர் மேடையில் பேசிய எல். முருகன் 

நேரு காலகட்டத்தில் அம்பேத்கர் புறக்கணிக்கப்பட்டார்

அம்பேத்கர் மிகப்பெரிய பொருளாதார நிபுணராகவும் நீர்வளத் துறையில் அம்பேத்கர் பெரிய சாதனை படைத்துள்ளார் .அண்ணல் அம்பேத்கர் நேரு அமைச்சரவையில் அவமானப்படுத்தப்பட்டார் என நேரு காலகட்டத்தில் அம்பேத்கர் புறக்கணிக்கப்பட்டார் என்று கூறினார். நரேந்திர மோடி அம்பேத்கரின் 125 வது பிறந்த நாளை கொண்டாடும்போது உலகத் தலைவராக வெளி கொண்டு வந்தோம் அதை வரைக்கும் அம்பேத்கர் சாதனை மறைத்து வைக்க பட்டுஇருந்தது .

அம்பேத்கர் பிறந்த இடத்தை புனித இடமாக அறிவித்தது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்

அம்பேத்கர்க்கு தாமதமாக  தான் பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது அதுவும் அத்வானையும் வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோதுதான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என தெரிவித்தார். அதேபோல ஜவஹர்லால் நேருவுக்கு நினைவிடம் இருந்த காலகட்டத்தில் அம்பேத்கருக்கு பிறந்த வீடு எங்கு இறந்தது என்று கூட தெரியவில்லை என்றும் அதனை கண்டுபிடித்து அம்பேத்கர் பிறந்த இடத்தை புனித இடமாக அறிவித்தது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தான் கூறினார்.

பீம்  செயலி - மோடி நிறைவேற்றம்

2015 அன்று தொடங்கபட்டு பணிகள் கண்டறிந்து டெல்லியில் அம்பேத்கர்  வீடு ,லண்டனில் அமபேத்கர்க்கு படித்த வீடு , மும்பையில் வீடு போன்ற 5 இடங்களில் தேசிய மையம் அமைக்கப்பட்டது பிரதமர் மோடிக்கு சாரும். நாம் அனைவரும் பயன்படுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை பீம் என்னும் செயலி மூலம் தான் செயல்படுகிறது. பீம் என்பது அம்பேத்கரின் பெயர். அம்பேத்கரின் கனவை நரேந்திர மோடி நிறைவேற்றி வருகிறார்.

அதே போல நாம் சுதந்திரம் அடைந்து 75  வருடம் ஆகி விட்டது என்றும் அம்ரித் கால் என்ற நூறாவது சுதந்திர ஆண்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் எனவும்  100வது சுதந்திர நாளில் 2047யில்  வெற்றி கண்ட நாடாக பிரதமர் மோடி தலைமையில் வேலை செய்து கொண்டு வருகிறோம் என்றார். நம் நாட்டின் வளர்ச்சி நாட்டின் பொருளாதாரம் அம்பேத்கரின் கனவோடு வீரநடை போட்டுக் கொண்டு இருக்கிறோம் என  பிரதமர் மோடி அம்பேத்கர் மீது பாசமும் நேசமும் வைத்துள்ளார் .

ஆனால் சிலர் சிங்கார சென்னையாக  மாற்றவோம் என கூறுகிறார்கள் கூவத்தை சுத்தப்படுத்துவோம் சிங்கப்பூர் ஆக மாற்று என்று கூறுகிறார்கள் ஆனால் அவர்கள் சொல்லி இருபது வருடமாகிவிட்டது இன்றைக்கும் கூவம் கூவம் ஆக  தான் இருக்கிறது இவை அனைத்தும் பிரதமர் மோடியால தான் மாற்ற முடியும் என பேசினர்.

திராவிட மாடல் ஆட்சியில் சமூக நிதி என்பது 0 சதவீதம்

சமூக நீதி என்றால் என்ன? நாம் அனைவரும் ஒன்றாக இருந்தால் சமூக நீதி என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் திமுக காரர்கள் சமூக நீதியை தான்தான் குத்தகை எடுத்தது போல் பேசுகிறார்கள், இவை அனைத்தும் பேச்சில் மட்டும் தான் ஆனால் செயலில் ஏதும் இல்லை என்று திராவிட மாடல் ஆட்சியில் சமூக நிதி என்பது 0 சதவீதம் ஆக உள்ளது  என்றார் 

 தூத்துக்குடி வேங்கை வாசலில் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு காலம் ஆகிவிட்டன இந்த திராவிட மாடல் காலத்தில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து 6 மாதம் மேல் ஆகிவிட்டது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதுதான் திராவிட மாடலா என்று விமர்சித்துள்ளார். சேலம் பகுதியில் கோவிலுக்குள் நுழைந்த பட்டியலில் நம் மக்களை திமுக நிர்வாகி ஒருவர் ஆபாசமாக அவர்களை பேசியதை நாம் அனைவரும் அறிவோம் எனவும் இதுவரை அவர் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

சமூக நீதி அடையாளம் என்பது பிரதமர் நரேந்திர மோடி தான்

அதேபோல பஞ்சாயத் தலைவர்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு குடியரசு தினத்தில்லும் சுதந்திர தினத்தில்லும் கொடி ஏற்ற முடியாத சூழ்நிலை தான் இந்த திராவிட மாடல் ஆட்சியில் திகழ்கிறது இதுதான் சமூக நீதி என கூறினார்.12 இரண்டு பேர் பட்டியிலின மக்கள் பாஜகவில் அமைச்சராக நியமிக்கப்பட்டார் ஆனால்  தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் மூன்றாவது இடத்தில் உள்ளார்கள் எனவும் சமூக நீதி அடையாளம் என்பது பிரதமர் நரேந்திர மோடி தான் என குறிப்பிட்டார்

தொடர்ந்து பேசியவர் திராவிட மாடல்  தோல்வியற்றது மாடலாக உள்ளது தமிழகத்திற்கு தேவையான மாடல் ஆன்மீக மாடல் தான் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் எனும் சமூக நீதியை வழங்கும்  என்று தெரிவித்துள்ளார்.