தமிழ்நாடு

அரசு அதிகாரிகளுக்கு இனிமேல் ஸ்நாக்ஸ் பதில் சிறுதானியங்கள் - உத்தரவு

மின்வாரிய அரசு அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் SNACKS ஆக சிறுதானியங்களை வழங்க உத்தரவு

Malaimurasu Seithigal TV

அகில உலக சிறுதானிய ஆண்டு

சிறுதானியங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட, லட்டு, மிக்சர், கொழுக்கட்டை, பிஸ்கட், சீடை போன்ற உணவு வகைகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் - மின்வாரியம். சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு பறைசாற்றும் வகையில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய நாடுகள் சபை நடப்பு 2023ஆம் ஆண்டினை அகில உலக சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. 

அனைத்து துறைச் செயலாளர்களுக்கும் கடிதம்

அரசுக் கல்லூரிகள், விடுதிகள், அரசு மருத்துவமனைகள், மதிய உணவுக்கூடங்கள், சிறைச்சாலைகள் போன்ற அரசு சார்ந்த நிறுவனங்களில் சிறுதானியங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட உணவு வகைகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என செயலாளர் இறையன்பு அனைத்து துறைச் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பி இருந்தார்.

அந்த கடிதத்தின் அடிப்படையில் சிறுதானியங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட, லட்டு, மிக்சர், கொழுக்கட்டை, பிஸ்கட், சீடை போன்ற உணவு வகைகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் மின்வாரியம் அறிவுறுத்தல். தமிழ்நாடு மின்சார வாரியம் சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும் மின்வாரியம் உத்தரவு