மாணவிகள் அளித்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்க சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 7 வழக்குகளில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
போக்சோ வழக்கில் ஜாமின் கோரிய வழக்கு செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சிவசங்கர் பாபா ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன் சிவசங்கர் பாபாவிற்கு நிபந்த்னை ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டார்.
மேலும் அவரது பாஸ்போர்ட்டை செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும், விசாரணைக்கு தேவைப்படும்போதெல்லாம் ஆஜராகவும், விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்காமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்றும் கூடுதல் நிபந்தனைகளை நீதிபதி ஜெயச்சந்திரன் விதித்துள்ளார்.