பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 78.
சென்னை நுங்கம்பாக்கம் ஹடோஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வசித்து வந்தார். வேலூரை பூர்விகமாக கொண்ட வாணி ஜெயராமின் கணவர் ஜெயராம், கடந்த 2018-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், மாடியில் இருந்து படிக்கட்டில் கீழே இறங்கியபோது தவறி விழுந்ததில் வாணி ஜெயராம் உயிரிழந்துள்ளார்.
உடற்கூறு ஆய்வுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பாடகி வாணி ஜெயராமின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், வாணி ஜெயராமின் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே, பின்னணி பாடகி வாணி ஜெயராம் நெற்றியில் காயத்துடன், தரையில் மயங்கிய நிலையில் கிடந்ததாக, அவரது வீட்டில் வேலை பார்த்துவரும் மலர்கொடி என்ற பெண் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மறைந்த பாடகி வாணி ஜெயராமின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: நிகழ்ச்சியும்.... நெரிசலும்.... உயிரிழப்பும்....