சேலத்தில் பிரபல திரையரங்கில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் லீ பஜார் பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவர் தனது குடும்பத்தோடு படம் பார்ப்பதற்காக ஏ ஆர் ஆர் எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கிற்கு சென்றுள்ளார். அப்போது, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு திரையரங்கில் விற்பனை செய்யப்பட்ட சிப்ஸ் பாக்கெட்டை வாங்கி கொடுத்துள்ளார்.
இதையும் படிக்க : சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலைமுரசு நிர்வாக இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் அஞ்சலி!
ஆனால், தமிழரசன் வாங்கி கொடுத்த சிப்ஸ் பாக்கெட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சிப்ஸ் ருசியும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழரசன், காலாவதியான உணவுப் பொருட்களை திரையரங்கில் விற்பனை செய்வதாக காவல்நிலையத்தில் புகார் தொிவித்தார்.
புகாரின் அடிப்படையில் திரையரங்கிற்கு சென்ற காவல்துறையினா், காலாவதியான உணவு பொருட்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், பிரபல திரையரங்கில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.