மதுரையில் கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியார்களை சந்தித்து அவர் பேசினார்.
ஜனநாயகம்:
அப்போது அவர் ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று ஜனநாயகத்தை குறித்து பேசினார் எனவும் ஆனால் ஜனநாயகத்தை அவர் தவறாக பயன்படுத்துகிறார் என்று பாஜக குற்றம் சாட்டுகிறார்கள் என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார். தொடர்ந்து பேசிய அவர் அது குற்றமில்லை எனவும் அது உண்மையே, எனவும் அப்படி சொல்வதற்கு அவருக்கு உரிமை இருப்பதுடன் ஒவ்வொரு மனிதருக்கும் உரிமை இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
உடைந்த கண்ணாடி:
அதிமுக பாஜக விரிசல் திமுக கூட்டணிக்கு வலு சேர்க்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, கூட்டணி என்பதே தமிழகத்தில் மதச்சார்பற்ற திமுக தலைமையில் உள்ள கூட்டணி தான் எனவும் அதிமுக கூட்டணி உடைந்த கண்ணாடி எனவும் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை கூறுவதாகவும் பதிலளித்தார்.
மேலும், அது எப்படி கூட்டணியாகும் எனவும் அவர்கள் தனி நபர்களை மையமாக வைத்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள் எனவும் நாங்கள் கொள்கையை மையமாக வைத்து கூட்டணி அமைத்திருக்கிறோம் எனவும் தெரிவித்த அவர் மதச்சார்பற்ற என்கிற ஒற்றை வரியில் நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம் எனவும் அதுதான் எங்களின் அடிப்படை, பாஜகவுக்கும் அதிமுக விற்கும் தமிழ்நாட்டில் அதற்கான உரிமையும், இடமும் கிடையாது எனவே அதை கூட்டணி என்று சொல்ல முடியாது எனவும் கூறினார்.
அரசியல் நோக்கம்:
வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தை தமிழக அரசு கையாண்ட விதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.எஸ். அழகிரி, மிகச் சரியாக கையாண்டார்கள் எனவும் தவறு செய்தவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் அரசியல் நோக்கத்தோடு அவைகள் செய்யப்பட்டிருக்கிறது எனவும் தமிழகத்தில் எல்லோருக்கும் வாழ்வதற்கான உரிமை உண்டு எனவும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்ட இடம் தமிழகம் எனக் கூறிய அவர் எனவே அதை யாரும் தவறாக சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: 200ல் இருந்து எங்களது உதயநிதி அதனை தொடர்ந்து நடத்துவார்....!!