திருவள்ளுர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி இயங்கி வந்த 75 மதுபான பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் மதுபானம் குடித்து உயிரிழப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் ஒழிப்பு, சட்ட விரோதமான மதுபான விற்பனையை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் பார்கள் அனுமதியின்றி இயங்கி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதிகளில் அனுமதி இன்றி இயங்கி வந்த 75 மதுபான பார்களுக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.