கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாலை சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் உள்ள கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலின் குடமுழக்கு விழா பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் அடிப்படையில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வரும் 27ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேபோல் சேலம் மாநகர காவல் துறை சார்பில் அம்மாபேட்டையில் இருந்து பட்டைக்கோயில் வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் மற்றும் அடிவாரம், கன்னங்குறிச்சி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து திருவள்ளுவர் சிலை வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்களும் தடை செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் பழைய பேருந்து நிலையம் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.