தமிழ்நாடு

"தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி 5.2%-ஆக குறைந்துவிட்டது" ஆளுநர் ஆர்.என்.ரவி!!

Malaimurasu Seithigal TV

ரசாயன பயன்பாடு அதிகரித்து வருவதால் உலக அளவில் விரைவில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மலை அடிவாரத்தில் உள்ள கோசலை பகுதியில் அமைந்துள்ள வள்ளலார் விவசாய பண்ணையில் விவசாயிகளுடன் உரையாற்றி, விவசாய சொந்தங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு முன்பு வரை விவசாயத்தில் தலையோங்கி இருந்தோம். அதற்கு பின்பு ஜப்பானை விட விவசாயத்தில், தமிழகம் முதன்மையாக உள்ளது. ஆங்கிலேயர் விவசாயத்திற்கு விதித்த வரி தான் விவசாயம் அழிவிற்கு காரணமாக இருந்தது. தமிழகத்தில் 7 சதவீதமாக இருந்த அரிசி உற்பத்தி தற்போது 5.2 சதவீதமாக குறைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் உற்பத்தியை மேம்படுத்த ரசாயன பொருட்களை அதிகளவில் பயன்படுத்தியதன் காரணமாக மண்ணின் தன்மை குறைந்து விட்டது" என்று பேசியுள்ளார்.

மேலும்,35 ஆண்டுக்கு முன்பு வரை கோதுமை உற்பத்தியில் முதலில் இருந்த இந்தியா தற்போது பஞ்சாபில் கோதுமை உற்பத்தி குறைந்துள்ளது, வேதியல் ரசாயன பயன்பாட்டால் விரைவில் உலகளாவிய அளவில் உணவு பஞ்சம் ஏற்படும் என தெரிவித்த ஆளுநர் ரவி கால்நடைகளில் இருக்கின்ற கழிவு நமக்கு உரமாக வேண்டும் எனவும் அப்போது தான் விவசாயத்திற்கு பாதுகாப்பு இருக்கும் என ஆளுநர் விவசாயிகளிடம் பேசியுள்ளார்.