தமிழ்நாடு

டி.எம்.சௌந்தரராஜன் சிலை வைக்க கோரிக்கை....!!

Malaimurasu Seithigal TV

திரைப்பட பின்னணி பாடகர், கலைமாமணி திரு டி.எம்.செளந்தரராஜன் நூற்றாண்டில், அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தவெளி வெளிவட்ட சாலை  `டி.எம்.சௌந்தரராஜன் சாலை` என பெயரிடப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது.

தன்னுடைய 24 வயதில் பாடத் தொடங்கிய செளந்தரராஜன், 88 வயது வரை 11 ஆயிரம் பாடல்களை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட 11 மொழிகளில் பாடி சாதித்தவர் செளந்தரராஜன் எனவும் ஒவ்வொரு நடிகருக்குத் தக்க விதத்தில் குரலை மாற்றி பாடும் வித்தகராக, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த அவர் என்றென்றும் மக்களோடே தன் குரலால் வாழ்ந்து வருகிறார்‌ எனவும் சி.பி.ஐ.(எம்) தலைவர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் செம்மொழி தமிழை போற்றும் விதத்தில் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாடலில் இறுதியாக அவரின் குரலும், பங்கேற்பும் இருந்தது எனவும் அதுவே அவரின் கடைசி பாடலாகவும் அமைந்தது குறிப்பிடத் தகுந்தது எனவும் கூறியுள்ளார்.

மதுரையில், அவர் பிறந்து வாழ்ந்த பகுதியில் திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சி.பி.ஐ.(எம்) முன்வைத்துள்ளதாகவும் தமிழ் நாடு அரசு விரைவில் அதனையும் சாத்தியமாக்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் எனவும் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.