தமிழ்நாடு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை மனு...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் நிர்வாகிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய  மனுவை அளித்தனர்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பார்கவுன்சில் தலைவர் அமலராஜ்.

கொரோனா பேரிடர் காலத்தை வென்றெடுத்த முதல்வருக்கு தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் உச்ச நீதிமன்ற கிளைகளில் வழக்கறிஞர்கள் கொண்ட அறை அமைக்க வேண்டும் என்றும் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முதல்வர் பிரதமரை  வலியுறுத்தியதற்காக நன்றி தெரிவித்தோம்.

மேலும் வழக்கறிஞர்களுக்கான  சேம நல நிதியை 7 லட்சத்திலிருந்து உயர்த்திதர வேண்டும் எனவும் கொரோன தொற்றால் மறைந்த வழக்கறிஞர்களுக்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சட்ட கல்லூரி அமைக்க வேண்டும் எனவும்,

வழக்கறிஞர்களுக்கு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தோம் முதல்வர் ஒவ்வொன்றையும் பரிசீலிப்பதாக கூறியுள்ளார். அதே போல் சட்ட அமைச்சரையும் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம் சட்டத்துறை அமைச்சரும் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அமைச்சரும். உறுதி அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பார் கவுன்சில் துணைத்தலைவர் கார்த்திகேயன் மற்றும் சங்கத்தின் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சேலம் மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில் 10 லட்ச ரூபாய்கான காசோலையை கொரோன நிவாரண நிதியாக முதல்வரிடம் அளித்தனர்.