தமிழ்நாடு

தந்தை பெரியார், நாகம்மை, கண்ணம்மை... மதுவுக்கு எதிரான மும்முனைப் போராளிகள்..! பா.ம.க.நிறுவனர் ராமதாஸ்...

தந்தை பெரியார், நாகம்மை, கண்ணம்மை ஆகியோர் மதுவுக்கு எதிரான மும்முனைப் போராளிகள் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Malaimurasu Seithigal TV
தந்தை பெரியார், நாகம்மை, கண்ணம்மை ஆகியோர் மதுவுக்கு எதிரான மும்முனைப் போராளிகள் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்று - மதுவுக்காக போராடிய பெரியாரும், குடும்பமும் மிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக மகாத்மா காந்தி குரல் கொடுத்தார். அதை ஏற்று தமிழ்நாட்டில் ஏலம் விடப்பட்ட 9000 மதுக்கடைகளில் 6000 மதுக்கடைகளை எவரும் ஏலத்தில் எடுக்கவில்லை என்று நேற்றைய முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
மகாத்மா காந்தியின் இந்த போராட்டத்திற்கு முன்பே அவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மதுவிலக்குப் போராட்டத்தை 1921-ஆம் ஆண்டே தந்தை பெரியார் தமிழகத்தில் சிறப்பாக நடத்தினார்.  தந்தை பெரியார் அடிப்படையில் சிக்கனவாதி. எதையும் இழக்க விரும்ப மாட்டார். ஆனாலும், தமது குடும்பத்திற்கு சொந்தமான தென்னை மரங்கள் கள் இறக்க பயன்படலாம் என்ற அச்சத்தில் 500-க்கும் மேற்பட்ட மரங்களை தந்தை பெரியார் வெட்டிச் சாய்த்தார்.
தொடர்ந்து நடத்திய போராட்டங்களுக்காக பெரியார் 21.11.1921 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  தந்தை பெரியார் கைதானவுடன் மதுவிலக்கு போராட்டம் பிசுபிசுத்துவிடும் என்று வெள்ளையர் அரசு நினைத்தது. ஆனால், அதை பொய்யாக்கினார் பெரியார். தமக்கு பதிலாக தமது மனைவி நாகம்மையையும், சகோதரி கண்ணம்மையையும் போராட்டத்தில் கலந்துக் கொள்ள செய்தார்.
மதுவிலக்கு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த போது, அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக மகாத்மாவுடன் ஆங்கிலேயர்கள் பேச்சு நடத்தினார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘‘மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டில் இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களைத்தான் கேட்க வேண்டும். அவர்கள் பாதிக்கப்படும் பெண் இனத்தின் பிரதிநிதிகள் ஆவர்’’ என்று பெருமையுடன் கூறினார். 
அந்த அளவுக்கு நாகம்மையும், கண்ணம்மையும் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக இருந்தனர். மதுவிலக்கை அடைவதில் மகாத்மாவும், பெரியாரும், நாகம்மை மற்றும் கண்ணம்மையும் போராட்டத்தால் சாதித்தவர்கள் என்றால், இராஜாஜியும், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரும் அதிகாரத்தால் சாதித்தவர்கள்.
சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன் மதுவுக்கு எதிராக மிகக்கடுமையான போராட்டங்களை தந்தைப் பெரியார் முன்னெடுத்தார். தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவரது வழி வந்தவர்கள் தான் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். பெரியார் வழியில் அவர்கள் மதுவிலக்கை ஏற்படுத்தவில்லை. மாறாக பெரியார் நினைவிடம் அமைந்துள்ள பெரியார் திடலுக்கு அருகிலேயே மதுக்கடைகளை திறந்துள்ளனர் என்று விமர்சித்துள்ளார்.