விருதுநகரில் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி இன்னும் 1½ ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தலின் போது சட்டமன்ற தேர்தலும் வர இருக்கிறது .
அண்ணாவின் பெயரை சொல்லி குறுக்கு வழியில் கட்சியை கைப்பற்றி ஆட்சிக்கு வந்த திமுக அண்ணாவின் பெயரையும் புகழையும் குப்பையில் தூக்கி போட்டு விட்டது. கலைஞரும் அவரது மகன் ஸ்டாலினும் குடும்ப வளர்ச்சியைதான் பார்க்கின்றனர்.
ஓட்டு போட்ட மக்களைப் பற்றி சிந்திக்காமல் வாக்களித்த தாய்மார்களை பற்றி சிந்திக்காமல் அதிமுக ஆட்சியில் இருந்த தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்பட்டது. அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் கைவிடப்பட்டது. முதியோர் பென்ஷன் ,விதவை பென்ஷன் பாதிக்கு மேல் குறைத்தாகிவிட்டது. மக்களை வஞ்சிக்கின்ற அரசாகத்தான் இன்றைக்கு இருக்கக்கூடிய திமுக அரசு இருக்கிறது ஸ்டாலின் இருக்கிறார். திமுக அரசு விடிகின்ற அரசாக இல்லை அது விடியா அரசாக இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.