டெல்லியில் நடந்த அனைக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டி.ஆர்.பாலு இதனை தெரவித்தார்.
விலைவாசி உயர்வை முக்கிய பிரச்சனையாக, விவாதிக்க தி.மு.க. சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்தாக கூறிய அவர், நீட் தேரவு மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பபடும் என பாலு கூறினார்.
அதை தொடர்ந்து பேசிய திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா இன்றைய கூட்டத்தொடரை ஒத்திவைத்து விட்டு விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க நோட்டிஸ் வழங்க முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தியதாக திமுக எம்பி சிவா கூறினார்.