மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆதிதிராவிடர் காலனிக்கு செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்ததால் பாதையை ஒதுக்கிக் கொடுக்க பல போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை இந்நிலையில் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பின்பு திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
திருமங்கலம் அருகே நடுக்கோட்டை கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன இதில் கடந்த 40 வருடங்களாக பழைய ஆதிதிராவிடர் காலனி மற்றும் கடந்த 20 வருடங்களாக புதிய ஆதிதிராவிடர் காலனி என இரு தெருவுக்கும் பொது பாதை அமைத்து கொடுக்காததால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி இருந்துள்ளனர் மேலும் ஆதிதிராவிட காலனியில் துக்க நிகழ்ச்சி நடந்தால் பிரேதத்தை எடுத்துச் செல்ல கூட பாதை இல்லை என்ற சூழல் எழுந்துள்ளது இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் இப்பாதை வழியாக ஊருக்குள் வருவதற்கு மாற்று சமுதாயத்தினர் அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு இருந்து வந்துள்ளது பொதுப் பாதையில் இருந்த ஆக்கிரமிப்பை மாற்று சமூகத்தினர் அகற்ற முடியாது என தெரிவித்தனர் தொடர்ந்து எட்டு வருட போராட்டத்திற்கு பின்பு திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார் தலைமையில் திருமங்கலம் தாலுகா போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுப் பாதையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது தொடர்ந்து பொதுப் பாதை ஆக்கிரமிப்பை இயந்திரம் கொண்டு அகற்றினர்
எட்டு வருடமாக இருந்த ஆக்கிரமிப்பை அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.