தமிழ்நாடு

முன்கள பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி டோக்கன்... அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்...

தடுப்பூசி போட பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய டோக்கன், முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதால் பொதுமக்கள் வாக்குவாதம்

Malaimurasu Seithigal TV
தடுப்பூசி போடுவதற்காக, கோவையில் உள்ள தடுப்பூசி மையங்களில், அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவையில் இன்று புறநகர மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள பல இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதிலும் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 46 இடங்களில் தலா ஒரு மையத்தில் 150 டோஸ்கள் வீதம் 6 ஆயிரத்து 900 தடுப்பூசிகள் போடப்படுகிறது.
இதனை தொடர்ந்து, தடுப்பூசி போடுவதற்காக அதிகாலை 3 மணி முதல் பொதுமக்கள் பல மையங்கள் முன்பு வரிசையில் காத்திருக்கின்றனர். இதனிடையே கோவை ஒண்டிபுதூர் தடுப்பூசி மையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய டோக்கன், முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதால், மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.