தமிழ்நாடு

"பப்ஜி பாய்ஸ்".. மயக்க நிலையிலும் "என்கவுண்டர் செய்யும் சிறுவன்"... திகைத்து போன மருத்துவர்கள்!! வைரல் வீடியோ!!

மயங்கிய நிலையிலும் செல் போனில் பப்ஜி கேம் விளையாடுவது போல் செய்கை செய்யும் சிறுவனின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Suaif Arsath

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் 17 வயது சிறுவன் ஒருவர் செல்போன் கேமுக்கு அடிமையாகியதன் காரணமாக மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டது போன்று வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

அந்த வீடியோவில் அந்த சிறுவன் கையில் துப்பாக்கி வைத்து சுடுவதைப் போன்ற பாவனையை தொடர்ந்து செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அந்த சிறுவனின் செய்கையை வைத்து சமூக வலைத்தளங்களில் பப்ஜி கேமுக்கு அடிமையான சிறுவனின் பரிதாப நிலை என பதிவிடப்பட்ட பரவி வருகிறது.

இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் கேட்டபோது, 

கடந்த ஐந்தாம் தேதி அதிகாலையில் நாங்குநேரி பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் அனுமதிக்கப்பட்டதாகவும் முதற்கட்ட சிகிச்சை முடித்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த போது அவரது உறவினர்கள் எந்த தகவலும் தெரிவிக்காமல் அழைத்துச் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் எதற்காக இந்த சிறுவன் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.