தமிழ்நாடு

பாலியல் ஆசாமி ராஜகோபாலனின் லேப்டாப்பில் மாணவிகளின் போட்டோக்கள்,..விஐபிகளின் மகள்களே அதிகம்,..அதிர்ந்த காவல்துறை.! 

Malaimurasu Seithigal TV

சென்னை கே.கே நகரில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளியில் பணியாற்றிய ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், ஆன்லைன் வகுப்பில் அறைநிர்வாணத்தில் வகுப்பு நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட ராஜகோபாலனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்ற்னர். அந்த விசாரணையில் தான் செய்த பாலியல் அத்துமீறல்களை ஒப்புக்கொண்ட  ராஜகோபாலன் மேற்கொண்டு தெரிவித்த தகவல்கள் காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. 

அவர் கூறிய தகவல்களின் படி அவரை தவிர வேறு சிலரும் இந்த பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதோடு தான் இதை விளையாட்டாக செய்ததாகவும் அது இவ்வளவு விபரீதமாகும் என்று தெரியவில்லை என்றும் அழுதுள்ளார். அதன்பின் தான் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது எப்படி என்றும் கூறியுள்ளது.

ஆன்லைன் வகுப்புக்காக உருவாக்கப்பட்டுள்ளது குழுக்களில் இருந்து பெண்களின் எண்களை எடுக்கும் ராஜகோபாலன் முதலில் சாதாரணமாக மெசேஜ் அனுப்புவாராம், அதன்பின் அந்த மாணவியின் ஆடை, உடலமைப்பு பற்றி கூறி அதற்கு அந்த பெண்ணின் பதில் எப்படி வருகிறது என பார்த்து அதற்கு ஏற்ப பாலியல் தொடர்பான பேச்சுகளை தொடர்ந்துள்ளார். 

மேலும் இவரது பேச்சுக்கு எந்த மாணவியும் எதிர்ப்பு தெரிவித்தால் மன்னித்துக்கொள், மாற்றி அனுப்பிவிட்டேன் என்று சொல்லி சமாளித்துள்ள தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் மாணவிகளிடம் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் அனுப்பியுள்ளார். அதோடு மதிப்பெண்ணை குறைப்பேன் என்று சொல்லியும் சில மாணவிகளிடம் ஆபாச புகைப்படங்களை பெற்றுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை தனது பள்ளியில் இருக்கும் இன்னும் 3 ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ளார். இந்த தகவலையும் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து அவரது மொபைல் போன் மற்றும் லேப்டாப்பை ஆராய்ந்த காவல்துறையினர் அதிர்ந்துள்ளனர். அவரது லேப்டாப்பில் மட்டும் 100க்கும் மேற்பட்ட  மாணவிகளின் அந்தரங்க புகைப்படங்கள் இருந்துள்ளன. பொதுவாகவே பி.எஸ்.பி.பி பள்ளியில் மேற்தரவர்க்கத்தினரின் பிள்ளைகளும்,சினிமா,விளையாட்டு பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகளின் பிள்ளைகளும் படிப்பார்கள். நிலைமை இப்படியிருக்க ராஜகோபாலனின் லேப்டாப்பில் கைப்பற்றப்பட்ட புகைப்படங்களில் பல இந்த சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரின் பிள்ளைகளின் புகைப்படங்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் மாணவிகளில் சிலர் ஆசிரியர் ராஜகோபாலனின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் அவர்மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மாறாக நிர்வாகம் அவருக்கு சாதகமாகவே இருந்தது என்றும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.