தமிழ்நாடு

கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் ஜூன்5ல் போராட்டம்... தூய்மை பணியாளர்கள்!!

Malaimurasu Seithigal TV

தூய்மை பணியாளர்களுக்கான ஊதியத்தை ஊராட்சி நிர்வாகம் வாயிலாக மாதந்தோறும் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூய்மை தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைப்பின் தலைவர் சக்திவேல் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் அச்சகம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சங்கம் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு குறித்து நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தூய்மை காவலர்களுக்கான மாத ஊதியம் 3600 ரூபாயிலிருந்து ரூபாய் 5000 ஊதியம் உயர்த்தியதினால் 66 ஆயிரத்து 138 பணியாளர்கள் உதவி அடைந்ததற்கும் மேலும் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் வழியாக சுமார் 500 பேருக்கு 11 லட்சம் மதிப்புடைய இலவச வீடு வழங்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதர்க்கும், அனைத்து தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளதுக்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

மேலும் கோரிக்கையாக 5000 ரூபாய் ஊதிய உயர்வு என்பது எங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தாது எனவும், எனவே குறைந்த பட்ச ஊதிய சட்டத்தின் அடிப்படையில் நாங்கள் வைக்கக்கூடிய மாதம் 20000 ஊதியம் வளங்க வேண்டும் எனவும், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு ஊதியம் என்பது மூன்று மாதத்துக்கு பிறகு கிடைக்கின்றது எனவும் எனவே இதனை அரசு பரிசீலனை செய்து  ஊதியத்தை நேரடியாக ஊராட்சிகள் வழியாக வழங்க வேண்டும் எனவும், மேலும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற ஜூன் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 50,000 தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களைக் ஒன்று திரட்டி கோரிக்கை மாநாடு நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளனர்.