தமிழ்நாடு

பழனியில் இந்து அமைப்பினர் போராட்டம்!

Malaimurasu Seithigal TV

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் ஹிந்துக்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று வைக்கப்பட்ட பதாகைகள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில். சில ஆண்டுகளுக்கு முன்பு பழனி கோவிலுக்கு ஹிந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேக பணிகளுக்காக பேனர்கள் அகற்றப்பட்டு, பராமரிப்பு வேலைகள் நடைபெற்றது. 

இதற்கிடையே, கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பழனி பேருந்து நிலையம் அருகில் பழக்கடை வைத்துள்ள சாகுல் என்பவர் உறவினர்களை அழைத்து வந்து மின் இழுவை ரயில் வரிசையில், நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட் பெற்றுள்ளார். டிக்கெட் பெற்ற பின்பு, அவரது உறவினர்கள் புர்கா அணிந்துள்ளனர். 

அதை பார்த்த நிர்வாகிகள், இங்கு மாற்று மதத்தினர் அனுமதிக்கப்படுவதில்லை என கூறி வழங்கிய டிக்கெட்டை திரும்ப பெற்றுனர். அப்போது சாகுல் ஹமீது அவரது உறவினர்களுடன், மின் இழுவை ரயில் கண்காணிப்பாளரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இது சுற்றுலா தளம் என்றும்  நீங்கள் பதாகைகள் வைத்திருந்தால் நாங்கள் ஏன் உள்ளே வரப் போகிறோம் என்றும் கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும், நான் வேண்டுமென்றால் சொந்த செலவில் பதாகையில் வைத்து தர வேண்டுமா? என வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது ஒன்று கூடிய ஹிந்து அமைப்பினர் பதாகைகள் ஏன்  கும்பாபிஷேகத்திற்கு பின்பு வைக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். அதன் பின்னரே, நேற்று ஹிந்துக்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார் என்று பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

பதாகைகள் வைக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, அவை அகற்றப்பட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து அமைப்பினர் ஒன்று கூறி மின் இழுவை ரயில் முன்பாக குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.