தமிழ்நாடு

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயம்...அதிரடி உத்தரவு!

Tamil Selvi Selvakumar

அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், ஓட்டுநர் நடத்துநர் பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் டிசிசி பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளை மேற்கொள்ளும் டி.சி.சி. பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை உருவாக்கியுள்ளது. அதன்படி, பொதுத் தமிழ் தேர்வில் 40 சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி என கருதப்பட்டு, இதர தேர்வு தாள் மதிப்பீடு செய்யப்படும். 

அதே நேரம், மொத்த மதிப்பெண்ணில் தமிழ் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது எனவும், 150 மதிப்பெண்ணுக்கு தேர்வர் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.