தமிழ்நாடு

நாட்டுடைமையாக்கப்பட்டது பேராசிரியர் மா.நன்னன் நூல்கள்...ரூ.10 லட்சம் காசோலையை வழங்கினார் முதலமைச்சர்!

Tamil Selvi Selvakumar

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேராசிரியர் மா.நன்னன் எழுதிய நூல்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டது. 


மாநில அரசின் சார்பில் பேராசிரியர் நன்னனுக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரது புத்தகங்கள் நாட்டுமையாக்கப்படும் என நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனை நிறைவேற்றும் விதமாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேராசிரியர் மா.நன்னன் எழுதிய நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நூலுரிமை பரிவுத் தொகைக்கான 10 லட்சம் ரூபாய் காசோலையை மா.நன்னனின் மனைவியிடம் முதலமைச்சர் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து கோவை, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 87 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரசு கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் புதிய கட்டிடங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதேபோல் அறநிலையத்துறை சார்பில் 81 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில்கள் புரணமைக்கும் பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.