சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பாரதியாரின் படம் திறப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பங்கேற்று திறந்து வைத்தார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு, மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மண்டபம் என புதிய பெயர் பலகை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
இதையடுத்து தர்பார் அரங்கிற்கு பாரதியார் பெயர் சூட்டப்பட்டது. தொடர்ந்து, குத்து விளக்கேற்றி பாரதியார் மண்டபம் என பெயர் மாற்றப்பட்ட பலகையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைத்து, பாரதியாரின் திருவுருவ சிலைக்கு பூக்கள் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து குடியரசுத் தலைவருக்கு அம்மன் சிலையை ஆளுநர் பரிசளித்துள்ளார்.
இதையும் படிக்க || ”6 குடியரசு தலைவர்கள் மாணவர்களாக பயின்றது சென்னை பல்கலைகழகத்திற்கு பெருமை” திரெளபதி முர்மு