தமிழ்நாடு

சென்னை வரும் குடியரசு தலைவர்... வரவேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!!

Malaimurasu Seithigal TV

குடியரசு தலைவர் நான்கு நாள்  பயணமாக தமிழகம் வருவதை ஒட்டி, சென்னை விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பு கான்வாய் வாகன ஒத்திகை நடைபெற்றது இதில் 27 வாகனங்கள் பங்கேற்பு

நான்கு நாள் பயணமாக  தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாளை மாலை சென்னை வருகிறார். அப்பொழுது, குடியரசு தலைவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்க உள்ளார். இதனை தொடர்ந்து, ஆகஸ்ட் .6-ஆம் தேதி ஆளுநர் அளிக்கும் விருந்தில் தமிழக முதல்வர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 6ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 165-வது பட்டமளிப்பு விழாவிலும்  குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளிக்கவுள்ளார். அதன் பின்னர், குடியரசு தலைவர் செவ்வாய்கிழமை மாலை 5:15 மணிக்கு சென்னையில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து, இன்று காலை 11 மணி முதல் 11 30 மணி வரை குடியரசு தலைவர் கான்வாய் வாகன பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகை வரையும், ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரையும், அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து ஆளுநர் மாளிகை ராஜ்பவன் வரையும் ஆளுநர் மாளிகையில்  ராஜ் பவனில் இருந்து, சென்னை விமான நிலையம் வரையும் பாதுகாப்பு கான்வாய் வாகன ஒத்திகை நடைபெற்றது. இதில் 27 வாகனங்கள் அணிவகுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தலைவர் சென்னை வருகையை ஒட்டி சென்னை பழைய விமான நிலையத்தில் குடியரசு தலைவருக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது நேற்று கூட்டத்தில் விமான நிலைய பாதுகாப்பு, போலீஸ்  பாதுகாப்பு உள்பட அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குடியரசு தலைவர் வருகையை ஒட்டி சென்னை விமான நிலையம் பழைய விமான நிலையம்  வாகன சோதனைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர் மேலும் சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.