தமிழ்நாடு

"மின்வேலி அமைக்க முன் கூட்டியே பதிவு செய்வது கட்டாயம்" வனத்துறை அறிவுறுத்தல்!

Malaimurasu Seithigal TV

மின்வேலி அமைக்க முன் கூட்டியே பதிவு செய்வது கட்டாயம் என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. 

வனப்பகுதியிலிருந்து வரும் புலி, சிறுத்தை, யானை, உள்பட பல்வேறு வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்த பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் வனவிலங்குகளை விவசாய காடுகளுக்கு அருகே உள்ள விவசாய நிலங்களில் நுழையாமல் தடுக்கும் வகையில் நிலத்தின் உரிமையாளர்கள் மின்வேலிகளை அமைத்து வந்தனர். ஆனால் மின்வேலிகளில் சிக்கி வன விலங்குகள் இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மின் விபத்திலிருந்து வன விலங்குகளை காக்க விதிகள் குறித்த அறிவிக்கை ஒன்றை வனத்துறை வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கையில் சூரியசக்தி மின்வேலிகள் உள்ளிட்ட மின்வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளை பதிவு செய்வதும் கட்டாயம் என சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.