தமிழ்நாடு

பொதிகை ரயில்: விடை கொடுக்கும் டீசல் இன்ஜின்... கை கொடுக்கும் மின்சார இன்ஜின்!

Malaimurasu Seithigal TV

தென்காசியில் டீசல் இன்ஜினிலிருந்து மின்சார இன்ஜினுக்கு மாறவுள்ள பொதிகை அதிவிரைவு ரயிலுக்கு ரயில் பயணிகள் சங்கம் சார்பில் விடை கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தென்னக ரயில்வே நிர்வாகத்தால் இயக்கப்பட்டு வரும் முக்கிய ரயில்களில் ஒன்று பொதிகை அதிவிரைவு ரயில் ஆகும். இந்த ரயிலானது தனது முதல் சேவை கடந்த 2004 ஆம் வருடம் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்த ரயிலானது தற்போது சென்னையில் இருந்து செங்கோட்டைக்கும், செங்கோட்டையிலிருந்து சென்னைக்கும் இரு மார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொதிகை அதிவிரைவு ரயிலானது தனது சேவையை தொடங்கி 20 ஆண்டு காலம் ஆகியுள்ள நிலையில் 20 ஆண்டு காலமாக டீசல் இன்ஜின் மூலம் தனது பயணத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வந்தது.

இந்த நிலையில், நாளை முதல் செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் பொதிகை அதிவிரைவு ரயிலானது மின்சார ரயில் இன்ஜின் பொருத்தி இயக்கப்பட உள்ள நிலையில் இன்றுடன் டீசல் இன்ஜின் சேவைக்கு பொதிகை அதிவிரைவு ரயிலானது விடை கொடுக்க உள்ளது.

இந்த நிலையில், அதனை கொண்டாடும் விதமாக செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் விடை கொடுக்கும் நிகழ்வானது நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஏராளமான ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு 20 ஆண்டுகாலம் வெற்றிகரமாக டீசல் இன்ஜின் மூலம் தனது சேவையை வெற்றிகரமாக தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் பொதிகை அதிவிரைவு ரயிலின் கடைசி டீசல் இன்ஜின் பயணத்தை நினைவு கூர்ந்தும், அதற்கு விடை கொடுக்கும் வகையிலும் ரயில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.