தமிழ்நாடு

பொங்கல் சிறப்பு பேருந்துகள்....எங்கிருந்து? எப்போது? முழு விவரம்....

Malaimurasu Seithigal TV

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடுஅரசு திட்டமிட்டுள்ளது. 

புறப்படும் பேருந்துகள்:

இது குறித்து சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் , இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்கு நாளை முதல் வரும் 14 ஆம் தேதி வரையில் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வந்துசேரும் பேருந்துகள்:

மேலும் பயணிகள் திரும்பி வருவதற்காக 18 முதல் ஜனவரி வரும்19 ஆம் தேதி வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடுஅரசு திட்டமிட்டுள்ளது.  அதன்பேரில், சென்னையில் 6 வெவ்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஆந்திரா பேருந்துகள்:

ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தகவல் தொிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி, கடலூர்...பேருந்துகள்:

இதனை தொடர்ந்து, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பேருந்துகள்  கே.கே. நகர் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து இருந்து கத்திப்பாரா பாலம், எஸ்.வி.படேல் சாலை , கிழக்குக் கடற்கரை சாலை வழியாக இயக்கப்படுகிறது. 

திண்டிவனம் பேருந்துகள்:

திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து  ஜி.எஸ்.டி சாலை வழியாக இயக்கப்படுகிறது.

வேலூர் பேருந்துகள்:

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

-நப்பசலையார்