காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் அடங்கிய காஞ்சிபுரம் சரக காவல்துறை அதிகாரிகளுக்கு மனநலம் சார்ந்த பயிற்சி வகுப்பு காஞ்சிபுரத்தில் டிஐஜி சத்திய பிரியா தலைமையில் தொடங்கியது.
மூன்று மாவட்டங்களில் உள்ள காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பில் மனநலம் ,உடல்நலம் சார்ந்த பயிற்சிகள் பயிற்சிகளை சென்னை நைட்டிங்கில் லைன்ஸ் கிளப் இணைந்து நடைபெற்றது.
இதில் பணியின் போது ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை மனநலம் சார்ந்து எவ்வாறு கையாள்வது குறித்தும், உடல் நலம் சார்ந்த பயிற்சிகள் இந்த பயிற்சி பட்டறையில் காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
இதன் நிறைவு விழாவில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் கூறியதாவது,
காஞ்சிபுரம் சரக காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் துறை தலைமையிடத்து இயக்குனர் உத்தரவின் பேரில் லயன்ஸ் கிளப்புடன் இணைந்து மனநலம், உடல்நலம் சார்ந்த பயிற்சிகள் சிறப்பாக வழங்கப்பட்டன என தெரிவித்தார்.
இதில் சென்னை நைட்டிங்கேல் லயன்ஸ் கிளப் தலைவர் ஜோஸ்வா ஜெரார்ட், அந்தோணி செபஸ்டின், டாக்டர் கண்ணன், ராஜலட்சுமி ஆகியோர் இதில் பங்கேற்று உரையாற்றினார்.