தமிழ்நாடு

ஹிஜாப் அணிந்து நடனமாடிய நபரிடம் போலீஸார் விசாரணை..!

Tamil Selvi Selvakumar

வேலூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஹிஜாப் அணிந்து கொண்டு நடனமாடிய நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வேலூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஹிஜாப் அணிந்து கொண்டு நடனமாடிய நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டிருந்த சிலைகள் இரண்டாம் கட்டமாக கரைக்க  ஊர்வலம் நடைபெற்றது. காட்பாடி அடுத்த விருதம்பட்டு, கழிஞ்சூர் பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்தில் இளைஞர்கள் சிலர் பல்வேறு வேடமிட்டு நாடனமாடியுள்ளனர். 

அப்போது இரண்டு இளைஞர்கள் இசுலாமிய பெண்கள் அணியும் ஹிஜாப்பை அணிந்தவாரு நாடனாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சமூக ஆர்வலரின் வாட்ஸ் -ஆப் புகார் விபரம் பின்வருமாறு:

“வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களே,... 

வேலூர் மாவட்டம் விருதம்பட்டு கைஞ்ஜூர் என்கிற பகுதியில் 20/9/23 அன்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இஸ்லாமிய பெண்கள் அணியக்கூடிய புர்காவை ஓர் ஆண் அணிந்து கொண்டு ஆபாசமாக நடனமாடிக் கொண்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு உள்ளது .

இதுபோன்ற பிற மத கலாசார நம்பிக்கைகளை கேலி செய்து அதன் மூலம் கலவரத்தை தூண்டும் நோக்கத்தோடு திட்டமிட்டு இந்த புர்கா அணிந்த நபர் மற்றும் அந்த நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் செயல்பட்டுள்ளனர்.

எனவே, காவல் துறை இந்த வீடியோவின் நிலை குறித்தும் , இதுபோன்ற மதமோதலை தூண்டும் விதமாக செயல்பட்ட புர்கா அணிந்து கொண்டு ஆபாசமாக நடனமாடிய மற்றும் அந்த நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” . என தனது புகாரை பதிவு செய்திருந்தார்.

இன்னிலையில், இது தொடர்பாக விருதம்பட்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.