தமிழ்நாடு

பெருங்குடி குப்பை கிடங்கு தீவிபத்து.. 2-வது நாளாக புகையை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு துறை!!

பெருங்குடி குப்பை கிடங்கில் நெருப்பு அணைக்கப்பட்ட நிலையில், வெளியேறும் புகையினை கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் தீயணைப்பு வீரர்கள் 2-வது நாளாக ஈடுபட்டுள்ளனர்.

Suaif Arsath

சென்னை மாநகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும்  5 ஆயிரம் டன் குப்பைகள், தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. இதில் மீதமுள்ள கழிவுகள் 225 ஏக்கர் பரப்பளவிலான பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று கோடை வெப்பம் காரணமாக மறுசுழற்சி கிடங்கில் தீப்பற்றியது. இதையடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு துறையினர் நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இருப்பினும் கரும்புகை வெளியேறி சுற்றுப்புற பகுதி மக்கள் கண்ணெரிச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில், 2-வது நாளாக கரும்புகையை கட்டுப்படுத்தி, தீ மேலும் பரவாமல் இருப்பதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.