தமிழ்நாடு

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி ..!

Malaimurasu Seithigal TV

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. கோபிசெட்டிபாளையம், புதுப்பாளையம், மொடச்சூர், கள்ளிப்பட்டி, கணபதி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், கோபிச்செட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாயினர். 

கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது, கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.

இந்த நிலையி;ல் கோபிசெட்டிபாளையம் , கரட்டூர், புதுப்பாளையம், மேட்டுவலுவு, மொடச்சூர், கள்ளிப்பட்டி, கணபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்கிறது.

மேலும், கனமழை காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளதால் கோபி நகரம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கியது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில்  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த திடீர் மழையால் வெப்பம் தணிந்தது, சாலை ஓரங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.